இன்று பெரும்பாலான நாத்திக வரலாற்று ஆய்வாளர்கள் பைபிளின் முதல் ஆறு புத்தகங்களை ஏற்றுக் கொள்ள முன்வருவதில்லை. இஸ்ரவேலில் ராஜ்யம் தோன்றிய பிறகே வலுவான சான்றுகள் கிடைப்பதாகவும், அதனால் இஸ்ரவேலின் மேல் ராஜ்யம் தோன்றுவதற்கு முன்பு நடந்ததாக பைபிள் கூறும் எந்த செய்திகளையும் உறுதியாக ஏற்றுக் கொள்ள முடியாது என பிடியாக உள்ளனர். அதாவது ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம், யோசுவா என்ற இந்த ஆறு புத்தகங்களும் உண்மையல்ல என்பது இவர்களின் கருத்து. எனவே, இஸ்ரவேலின் மேல் ராஜ்யம் உண்டான போது தங்களுக்கு ஒரு அடையாளத்தை ஒற்றுமையைத் தேடிக் கொள்ள விரும்பிய இஸ்ரவேலர்கள் பைபிளின் முதல் ஆறு புத்தகங்களையும் உண்டாக்கினார்கள் என்கிறார்கள். சரி, அதற்கடுத்த 61 நூல்களையாவது முழுமையாக ஏற்றுக் கொள்கிறார்களா என்றால் அதுவும் கிடையாது, அதிலும் சில செய்திகளை ஏற்கின்றனர், சில செய்திகளை மறுக்கின்றனர். அப்படியென்றால் நாம் பைபிளை நம்பலாமா? தொடர்ந்து படிக்கவும்...
நிச்சயமாக வரலாற்று ஆய்வாளர்களின் மேல் நாம் வருத்தம் கொள்ளக் கூடாது. ஏன் என்றால் அறிவியல், வரலாறு போன்ற செய்திகளை ஆராயும் போது வேதங்களுக்கும், மார்க்க ரீதியான புனித நூல்களுக்கும் முதல் இடம் கிடையாது, அதற்கு பதிலாக அக்காலத்தில் எழுதப்பட்ட சரித்திர ரீதியான தடயங்களைத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, இயேசுவிற்கு ஞானஸ்நானம் கொடுத்த திருமுழுக்கு யோவானின் இறப்பைக் குறித்து சில செய்திகளை மாற்கு சுவிசேசம் கூறுகிறது, ஜோசபஸ் என்ற முதல் நூற்றாண்டு யூதர் எழுதிய நூல் ஒன்று கூறுகிறது. இதில் ஒரு வியப்பு என்னவென்றால், மாற்கு சுவிசேசம் யோவான் இறந்து 30 ஆண்டுகளுக்குள் எழுதி முடிக்கப்பட்டது, மாற்கின் ஆசிரியர் யோவான் வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்தவர். ஆனால் ஜோசபஸின் நூல் யோவான் இறந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டது, ஜோசபஸ் யோவான் இறந்த பின்பு பிறந்தவர். ஆனால் யோவானிற்கு உரிய சரித்திர ஆதாரமாகவும், அவர் வாழ்க்கைக் குறித்த செய்திகளை அறியவும் பைபிளின் மாற்கின் சுவிசேசத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், அதற்கு பதிலாக ஜோசபஸின் நூலையே கணக்கில் ஏற்கின்றனர். பைபிள் ஜோசபஸின் நூலைவிட நம்பத்தகுந்ததாக இருந்தாலும் அது இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்படுவதற்கு முதல் காரணம், அது சமயஞ்சார்ந்த புனித நூல்... கிறிஸ்தவர்கள் நம்புவது போல பிற மக்கள் அதனை நம்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதன் காரணமாகவே அது முதலாவது புறந்தள்ளப்படுகிறது.
இதனால் கிறிஸ்தவர்கள் வருந்த தேவையில்லை. மாறாக சந்தோசப்பட வேண்டிய செய்தி இது. கிறிஸ்தவர்கள் வேறொரு சமயத்தின் நம்பிக்கைகளையும், அந்த சமயத்து தெய்வங்கள் நிகழ்த்தியதாகக் கூறப்படும் அதிசயங்களையும் (ஏன் இந்தியாவில் கூட நிறைய புராணக் கதைகள் உண்டே!) ஏற்றுக் கொள்வார்களா? இல்லை...! அது போலவே மற்ற மக்களும் பைபிளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்ப்பார்க்கக் கூடாது. வரலாறை ஆராய விட வேண்டும், அப்போது எது பொய், எது உண்மை என்பது மக்களுக்குத் தெளிவாக தெரிந்துவிடும். இன்று பைபிளை விட வேறெந்த புனித நூல் சரித்திரத்தில் அதிகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது? நிச்சயமாக புனித நூல்களில் சரித்திரச் செரிவிற்காக முதல் இடம்பிடித்த நூல் பைபிளே, அதன் காரணமாகவே இறை நம்பிக்கையுள்ளோர் பெரும்பாலானோர் இயேசு கிறிஸ்துவை ஏற்கின்றனர். அதோடு இயேசு கிறிஸ்து சொல்வது போல, "நமக்கு நாமே சாட்சிக் கொடுத்தால் அது தகாது". வரலாற்றை ஆராயந்து கிட்டிய சான்றுகள் பலவற்றைச் சுட்டிக் காட்டி பைபிளில் காணப்படும் பல செய்திகளை வரலாறு 100% ஏற்றுக் கொண்டுவிட்டது, ஆனால் பிற புனித நூல்கள் பலவற்றுக்கு ஒரு செய்திக் கூட இன்னும் நிருபிக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்க. எனவே, நம்பிக்கையைத் தளரவிடாதீர்கள்...! உங்களை அழைப்பவர் உண்மையுள்ளவர்...
மேலே பைபிளின் முதல் ஆறு நூல்களை வரலாற்று ஆய்வாளர்கள் தயக்கம் காட்டுகிறார்கள் என ஒரு செய்தி கண்டோம். அது வியப்பல்ல, ஏன் எனில் இதற்கு முன்பு வரலாற்று ஆய்வாளர்கள் பாபிலோனுக்கு இஸ்ரவேலர்கள் சிறைப்பட்டு போனதற்கு முன்பு நிகழ்ந்ததாக பைபிள் கூறுகின்ற செய்திகளை கூட ஏற்க முன்வரவில்லை. தாவீது, சாலமோன் போன்ற பைபிளின் அரசர்கள் எல்லாம் புராணக் கதாநாயகர்கள் என சொல்லப்பட்டனர், ஆனால் தடம்புரண்டது, இப்போது தாவீது, சாலமோன் வாழ்ந்தனர் என ஏற்றுக் கொண்டு இன்னும் 500 ஆண்டுகள் பின் தள்ளி சென்று விட்டார்கள், இன்று இஸ்ரவேலின் மேல் ராஜ்யம் உண்டான பிறகு பைபிள் கூறுகின்ற செய்திகள் வேண்டுமானால் ஒர் அளவு உண்மை என ஏற்றுக் கொள்கின்றனர். அப்படி இப்படி என சுருக்கி தற்போது பைபிளின் முதல் ஆறு புத்தகங்கள் வரை ஆய்வுகள் வந்துவிட்டன. இந்த வலைப்பூவில் பைபிளை உண்மைப்படுத்தும் அத்தனைக் கண்டுபிடிப்புகளையும், ஆய்வாளர்களால் 100% ஒத்துக் கொள்ளப்பட்ட ஒவ்வொரு உண்மைகளையும் காணலாம். தற்போது, பைபிளின் பிற நூல்களைப் போல முதல் ஆறு நூல்கள் கூட சரித்திரத்தில் நிகழ்ந்த உண்மைதான் என்பதற்கு ஆதாரங்களைக் காணலாம். அதிலும் குறிப்பாக யாத்திராகமம் பற்றி...
இதுவரை நீங்கள் கண்டது அறிமுகம் மட்டும் தான், இன்னும் கட்டுரைக்குள்ளே நாம் நுழையவில்லை, அடுத்த பகுதியில் இதன் தொடர்ச்சியைக் காணலாம்...

No comments:
Post a Comment